திருமணம் ஆகிவிட்டது... வேண்டாம் என கதறி அழுகிறார்கள்! காசியிடம் சிக்கிய பெண்கள் பற்றி விசாரணையில் திடுக் தகவல்

Report Print Santhan in இந்தியா
2120Shares

தமிழகத்தில் சமூகவலைத்தளம் மூலம் இளம் பெண்களிடம் பழகி, பலரின் வாழ்க்கையை சீரழித்து காசி சம்பவத்தின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க காசி என்பவன் இளம் பெண்கள் பலரிடம் சமூகவலைத்தளங்களில் பழகி சீரழித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

இவன் மீது 6 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது, சிபிசிஐடி பொலிசார் காசி மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது, காசியின் லேப்டாப்பில் அழிக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்களை சைபர் க்ரைம் சிறப்பு குழு மீட்டது. அதில் பொலிசார் மலைத்து போகும் அளவுக்கு 1000-த்துக்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் இருந்துள்ளன.

இதையடுத்து அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் இருக்கும் அடையாளங்களை வைத்து பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

காசியின் செல்போன் சிம்கார்டு, போன் மெமரி, கூகுள் ஸ்டோர் உள்ளிட்டவற்றில் 17 ஆயிரம் எண்கள் இருந்துள்ளன.

இதில் பல எண்கள் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால், காசியின் தொடர்பில் இருந்த செல்போன் எண்களில் பொலிசார் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

காசியிடம் பெங்களூர், மும்பை, நெல்லை, கடலூர், சென்னை மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த பல பெண்கள் சிக்கியுள்ளனர். இதில் சென்னை, மும்பை, குமரி மாவட்டத்தை சேர்ந்த பல பெண் டாக்டர்கள், மருத்துவ மாணவிகளும் அடங்குவர்.

மேலும் சென்னையை சேர்ந்த ஒரு பேராசிரியையும் இவரிடம் சிக்கியுள்ளார். பெரும்பாலான ஆபாச படங்கள் காசியும், பாதிக்கப்பட்ட பெண்களும் சேர்ந்து இருப்பதுபோல் இல்லாமல், காசியின் வற்புறுத்தலுக்கு இணங்க, அவர்கள் தங்களது உடல் அழகை வீடியோவாக எடுத்து, காசிக்கு அனுப்பியுள்ளனர்.

இதனை அவன் பதிவிறக்கம் செய்து, அந்த வீடியோவை வைத்து அந்த பெண்களை சீரழித்து, பணம் பறித்துள்ளான்.

பெண்களை பலாத்காரம் செய்யும் வீடியோக்கள் எல்லாம் பெரும்பாலும் காரில் வைத்தே காசி எடுத்துள்ளான். அவனது தொடர்பில் இருந்த பெண்களிடம் பேசி பொலிசார் புகார் கொடுக்குமாறு கூறியுள்ளனர். ஆனால், அதில் பெரும்பாலான பெண்கள், திருமணம் ஆகிவிட்டதால் புகார் வேண்டாம் என கதறி அழுதுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்