முதலில் மொபைல் ஷாப் நண்பர்... பின்னர் அவரின் நண்பர்! தாயின் முறையற்ற பழக்கத்தால் நடந்த பயங்கரம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் ஐந்து வயது மகள் மனைவியின் காதலனால் கொலை செய்யப்பட்டதால், தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் Pocharam-ல் உள்ள Vihar காலனியில் 5 வயது மதிக்க சிறுமி திருமணத்திற்கு புறம்பான உறவால், தாயின் காதலனால் படுகொலை செய்யப்பட்டார்.

இதில் அந்த சிறுமியின் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில், Bhuvanagiri நகரைச் சேர்ந்த Kalyan Rao என்பவர் அனந்த பூர் மாவட்டத்தை சேர்ந்த Anusha என்ற பெண்ணை காதலித்து கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Kalyan Rao (Photo | Express)

பஞ்சாயத்து செயலாளாராக Kalyan Rao வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதற்கு Aadhya என்று பெயர் வைத்துள்ளனர்.

இவர்கள் Pocharam-ல் இருக்கும் Vihar காலனியில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், Anusha-விற்கு மொபைல் கடை ஒன்றில் கருணாக்கர் என்பவரின் நட்பு கிடைத்துள்ளது. இவர்களின் நட்பு நாளைவில் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளது.

அப்போது, கருணாகர் தனது நெருங்கிய நண்பரான ராஜசேகர் என்பவரை அனுஷாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இதையடுத்து ராஜசேகரிடம் பழகி வந்தஅனுஷா, கருணாக்கரை தவிர்க்க துவங்கியுள்ளார்.

இதனால் கருணாக்கருக்கு, ராஜசேகர் மீது கோபம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜசேகரை கொலை செய்ய முடிவு செய்த கருணாக்கர், அதற்காக கடந்த 2-ஆம் திகதி அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்படும் இரண்டு கத்திகளை வாங்கி, ராஜசேகரை தேடி, அனுஷாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆனால் அவரைப் பார்த்ததும், ராஜசேகர் ஆத்யாவின் அறையில் பூட்டி ஒளிந்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருணாகர் அங்கிருந்த ஆத்யாவை குத்திவிட்டு, அதன் பின் கத்தியால் தன்னைத் தானே அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதன் பின் உடனடியாக ஆத்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், பரிதாபமாக இறந்தார்.

கருணாக்கரின் உயிருக்கு ஆபத்தில்லை என்பதால், அவர் தொடர் சிகிச்சைக்கு பின் கடந்த 7-ஆம் திகதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து பொலிசார் அவரை உடனடியாக கைது செய்தனர். இதனால் ஒரே மகளை, மனைவியின் முறையற்ற பழக்கத்தால் இழந்து தவித்த தந்தை Kalyan Rao கடந்த சனிக்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்