கட்டாயப்படுத்தி கணவர் குடும்பத்தார் செய்த செயல்! திருமணமான இளம்பெண் குறித்து பெற்றோருக்கு வந்த அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமணமான இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கணவர் குடும்பத்தார் அவரை விஷம் வைத்து கொலை செய்துவிட்டதாக பெண்ணின் தாயார் கண்ணீருடன் கூறியுள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் லோஹாரி கிராமத்தை சேர்ந்தவர் பட்டேரி (21). இளம்பெண்ணான இவருக்கும் ஹுசைன் என்பவருக்கும் கடந்த 2018ல் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் பட்டேரி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இது குறித்து பட்டேரியின் குடும்பத்தாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து பட்டேரியின் தாயார் கூறுகையில், என் மகளை அவரின் கணவர் மற்றும் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு தினமும் கொடுமைப்படுத்தி வந்தனர்.

அதிலும் புதிய கார் வேண்டும் என ஹுசைன் அவரை தொடர்ந்து தாக்கியுள்ளார்.

பட்டேரி இறப்பதற்கு முந்தைய நாள் எனக்கு போன் செய்தார். அப்போது அழுதுகொண்டே, கணவர் மற்றும் மாமனார், மாமியார் தினமும் அடிப்பதாக கூறினார்.

அவர்கள் அனைவரும் சேர்ந்து பட்டேரிக்கு கட்டாயப்படுத்தி விஷத்தை வாயில் ஊற்றி கொலை செய்துள்ளனர் என கூறியுள்ளனர்.

இந்த புகாரை தொடர்ந்து ஹுசைன் மற்றும் அவர் பெற்றோர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்