எனக்கு பண உதவி வேண்டாம்!.. பிறந்து 6 மாதத்திலேயே போலியோவால் பாதிக்கப்பட்ட நபரின் உருக்கமான கோரிக்கை

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழ்நாட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சுரேஷ் என்பவர் அரசுக்கு மிக உருக்கமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

பிறந்து 6 மாதத்திலேயே போலியாவால் பாதிக்கப்பட்டு கால்கள் முடங்கியது, இருப்பினும் தன்னுடைய அயராத உழைப்பால் Ph.D பட்டம் பெற்றார்.

என்னதான் சான்றிதழ்கள், திறமை இருந்தாலும் இன்றளவும் சிறு சிறு வேலைகளை செய்தே பிழைப்பை நடத்தி வருகிறார்.

இவரது நிலையை பார்த்து மற்றவர்கள் உதவினாலும் வாங்க மறுத்துவிடுவாராம், என்னிடமிருந்து பொருட்களை வாங்கி பயன்படுத்துங்கள், அதை மற்றவர்களுக்கும் சொல்லுங்கள் அது போதும் என்கிறார்.

கல்வித்தகுதியுடன் கூடிய மாற்றுத்திறனாளிகள் இருப்பதே குறைவு தான், போட்டித்தேர்வு என்றில்லாமல் அரசு எங்களது பக்கத்திலும் பார்வையை திருப்பினால் போதும், நாங்களும் தகுதியான நபர்கள் தான் என உருக்கமாக பேசியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்