வேலையை விட்டுவிட்டு இந்தியா விரைந்த இளைஞர்: கோரன்டைனால் இறந்த தாயின் முகத்தைக்கூட பார்க்க முடியாத சோகம்

Report Print Arbin Arbin in இந்தியா
192Shares

ஐக்கிய அமீரகத்தில் வேலையை விட்டுவிட்டு தாயாரை பார்க்க இந்தியா விரைண்ட இளைஞர், சுய தனிமைப்படுத்தலால் இறந்த தாயாரின் முகத்தை பார்க்க முடியாத சோகம் நிகழ்ந்துள்ளது.

இந்திய தலைநகர் டெல்லியை சேர்ந்தவர் 30 வயதான ஆமிர் கான். கடந்த 6 ஆண்டுகளாக ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் தாயாருக்கு உடல் நலம் சரியில்லாததால் வேலையை விட்டுவிட்டு தாயாருடன் தங்கியிருக்க முடிவு செய்தார் ஆமிர் கான்.

ஆனால் ஊரடங்கு உத்தரவால் வெளிநாட்டில் உள்ளவர்கள் சொந்த நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.

இதனிடையே மே 2-வது வாரத்தில் இருந்து வெளிநாட்டில் சிக்கியவர்களை விமானம் மூலம் இந்தியா அழைத்து வர மத்திய அரசு முடிவு செய்தது.

துபாயில் இருந்து ஆமிர் கானும் தாயின் உடல்நிலை சரியில்லாததை சுட்டிக்காட்டி இந்தியா வர அனுமதி பெற்றார். வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் நபர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற வழிமுறை உள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

13 ஆம் திகதி இந்தியா வந்தடைந்த ஆமிர் கான் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த உள்ளார்.

ஆனால், வழிமுறையில் மாற்றம் செய்து சொந்த செலவில் 7 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அதன்பின் ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என இந்திய அரசு அறிவித்தது.

இதனையடுத்து தனிமைப்படுத்தலில் 7 நாட்கள் முடிவடைத்ததை சுட்டிக்காட்டி, தம்மை குடியிருப்புக்கு அனுப்ப வேண்டும் என ஆமிர் கான் மருத்துவமனை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால் அதிகாரிகள் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கவில்லை. இந்நிலையில் அவரது தாயாரின் உடல்நிலை மிகவும் மோசமாகி அவர் இறக்க நேர்ந்தது.

மட்டுமின்றி கொரோனா காலம் என்பதால், உடனடியாக அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குக்கூட ஆமிர் கான் அனுதிக்கப்படவில்லை.

உடல் நலம் குன்றிய தாயாரை பார்க்க வேலையை விட்டுவிட்டு வந்த போதிலும், இறந்த தாயின் முகத்தைக்கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதாக ஆமிர் கான் கண்ணீர் விட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்