இன்னும் அதிகமாக எதிர்பார்த்தான்! மனைவியை விஷப்பாம்பை கடிக்க வைத்து கொன்ற கணவன் குறித்து மாமனார் கூறிய தகவல்

Report Print Raju Raju in இந்தியா
3214Shares

கேரளாவில் மனைவியை விஷப்பாம்பை கடிக்க வைத்து கணவன் கொலை செய்த சம்பவத்தில் பெண்ணின் தந்தை சில அதிர்ச்சி விடயங்களை கூறியுள்ள நிலையில் தாயார் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த உத்ரா என்ற பெண்ணுக்கும் சூரஜ் என்ற நபருக்கும் கடந்த 2018ல் திருமணம் ஆன நிலையில் ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் உத்ரா இம்மாதம் ஏழாம் தேதி பாம்பு கடித்து உயிரிழந்தார்.

அதன் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், மனைவியைக் கொல்வதற்காகவே திட்டமிட்டு சூரஜ் 5,000 ரூபாய்க்கு ஒரு பாம்பை விலைக்கு வாங்கியதாகத் தெரியவந்தது.

அவ்வாறு அவர் பாம்பு வாங்கி சதி செய்தது இது முதல்முறையல்ல.

ஏற்கெனவே, கடந்த பிப்ரவரி மாதத்தில் 5,000 ரூபாய்க்கு பாம்பு வாங்கி மனைவி உத்ராவுக்கு தெரியாமலேயே அவரைக் கடிக்கவிட்டதும் தெரியவந்துள்ளது.

ஆனால், அப்போது உத்ராவின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் 10,000 ரூபாய்க்கு விஷப் பாம்பு வாங்கிய சூரஜ், மே 7ம் திகதி அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த உத்ராவை கடிக்க விட்டதாகக் கூறப்படுகிறது..

தனது திட்டம் வெளியில் தெரியாதபடிக்கு, கவனமாக இருந்த சூரஜ், மனைவியிடம் அன்பாக இருப்பது போலவே நடித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மனைவிக்கு பாம்பு கடித்ததை காலை வரை யாரிடமும் சொல்லாமல் இருந்து, அவர் உயிரிழக்க காரணமாகியுள்ளார் சூரஜ்.

இந்நிலையில் சூரஜை பொலிசார் கைது செய்த நிலையில் அவரை மனைவி வீட்டுக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

அப்போது வீட்டில் இருந்த உத்ராவின் தாயார் மணிமேகலா, சூரஜை பார்த்து இவன் என் மகளை கொன்றுவிட்டான், அவன் வீட்டுக்குள் நுழையக்கூடாது, இங்கு அவனை அழைத்து வராதீர்கள் என அழுது கதறினார்.

உத்ராவின் தந்தை விஜயசேனன் கூறுகையில், சம்பவத்தன்று இரவு 8.30 மணிக்கு என் மகளை பாம்பு கடித்த நிலையில் அவளை அதிகாலை 3 மணிக்கு தான் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர், அது ஏன்? என் மாப்பிள்ளை சூரஜ் என்னிடம் இருந்து இன்னும் அதிக பணம் வாங்க நினைத்து அதை எதிர்பார்த்தான்.

திருமணத்தின் போது 784 கிராம் தங்கம், கார் போன்றவற்றை வரதட்சணையாக கொடுத்தோம் என கூறியுள்ளார். இதனால் பணம், நகைக்காக மனைவியை கொன்றிருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

இரண்டு முறை தான் சூரஜ் மனைவியை கொல்ல முயன்றார் என கூறப்படும் நிலையில் இன்னும் அதிக முறை கொலை செய்ய முயற்சி செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

பொலிசார் கூறுகையில், நாங்கள் இன்னும் வழக்கை விசாரித்து வருகிறோம். ​​அவர் மறுமணம் செய்ய தான் மனைவியை கொன்றாரா என்பதற்கான ஆதாரம் எங்களிடம் இதுவரை இல்லை என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்