பெண்களின் நிர்வாண வீடியோக்களை வெளியிட்டது யார்? 12 பெண்கள் பெயரை சொன்ன காசி... வெளியான புதிய தகவல்

Report Print Raju Raju in இந்தியா
2288Shares

பெண்களின் நிர்வாண வீடியோக்களை வெளிநாட்டில் இருந்து வெளியிட்டு கொண்டிருப்பது காசியின் நண்பனாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் விசாரணையில் உள்ள காசி 12 பெண்களின் பெயரை வெள்யிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

நாகர்கோவில் காசி வழக்கு நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

சிறுமிகள் முதல் குடும்ப பெண்கள் வரை சீரழித்து, அந்த வீடியோவை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார்.

இவரது லேப்டாப்பில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் உள்ளதை வைத்து விசாரணை நடந்தது. முதலில் 3 நாள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டது, பெரிதாக எந்த தகவலையும் பொலிசாரால் பெற முடியவில்லை.

இதையடுத்து 17 வயது சிறுமி தந்த புகாரின் அடிப்படையில் தற்போது 2-வது முறையாக 6 நாள் பொலிஸ் காவலில் விசாரணை நடந்து வருகிறது. சிறுமி புகார் தரவும், இன்னும் நிறைய சிறுமிகள் இவரால் பாதிக்கப்பட்டிருப்பார்களா என்பதை விசாரிக்கவே இந்த 2வது முறையாக பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

அந்த விசாரணையில், என் உடல் பிடிச்சு போய் தான் பெண்கள் என்னிடம் விழுந்தார்களே தவிர, நானாக யாரையும் ஏமாற்றவில்லை, கல்யாணம் செய்து கைவிடவும் இல்லை என்றார்.

இப்போது அடுத்த புதிய தகவலாக, 12 இளம்பெண்களின் பெயர்களை காசி சொல்லி உள்ளாராம். இந்த 12 பேரின் பெயர்களையும் அவர் வாயிலிருந்து எளிதாக பெற முடியவில்லை. இந்த 12 பெண்கள் யார் என விசாரணை நடத்த பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்கடுத்தாக, காசி பொலிஸ் பிடியில் உள்ளபோது ஏராளமான நிர்வாண, ஆபாச வீடியோக்களை வெளியிட்டது யார் என்ற சந்தேகம் எழுந்ததுள்ளது. முதல்முறை காசியை விசாரித்தபோதே, ஒருசில ஆபாச வீடியோக்கள் வெளியாகின. இதை யார் வெளியிட்டார்கள் என்ற தெரியவில்லை. அதேபோல 2வது முறையாக விசாரணை நடத்தும்போதும், ஏராளமான பெண்களின் வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வெளியாகின.

காசியின் 2 நண்பர்களில் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் பதுங்கியுள்ள இன்னொரு நண்பன் மூலமாகத்தான் இந்த வீடியோக்கள் வெளியாகி இருக்கும் என்று சந்தேகிக்கப்படும் நிலையில் அது விரைவில் உறுதிப்படுத்தப்படும் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்