இலங்கையிலிருந்து திரும்பியதும் தனிமைப்படுத்தப்பட்டதால் விரக்தி: மூதாட்டியின் குரல்வளையை கடித்து வெறிச்செயல்

Report Print Vijay Amburore in இந்தியா

ஒரு வார காலமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர், நிர்வாணமாக தெருவில் ஓடிச்சென்று மூதாட்டியின் குரல்வளையை கடித்துக்கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தை சேர்ந்த இராமநாதன் என்பவரது மகன் மணிகண்டன் (34). இலங்கையில் துணி வியாபாரம் செய்வதற்காக சென்றிருந்த இவர், கடந்த 21ம் திகதியன்று இந்தியா திரும்பியுள்ளார்.

கொரோனா வைரஸின் தீவிரத்தால் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி வரும் அதிகாரிகள், மணிகண்டனையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.

ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளான மணிகண்டன், நேற்று இரவு வீட்டிலிருந்து நிர்வாணமாக வெளியில் ஓடிவந்துள்ளார்.

அப்போது அவரது அருகாமையில் உள்ள வீட்டின் வாசலில் உறங்கிக்கொண்டிருந்த நாச்சியம்மாள் (74) என்பவரின் குரல்வளையை கடித்து படுகாயத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள்ளாக நாச்சியம்மாள் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்