தமிழகத்தில் கொரோனா வார்டில் இருந்த 2 வயது குழந்தை உள்ளிட்ட மூவர் அடுத்தடுத்து மரணம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தின் கன்னியாகுமரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மூன்று பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று புதிதாக மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40ஆக உயர்ந்துள்ளது.

கும்பகோணத்தை சேர்ந்த 42 வயதான நபர், காட்பாடியை சேர்ந்த 49 வயதான நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் இருந்து திரும்பிய கும்பகோணத்தை சேர்ந்தவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரித்தானியாவில் இருந்து திரும்பிய காட்பாடியை சேர்ந்தவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று மேலும், 3 பேர் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் உயிரிழந்துள்ளனர். காலையில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். தற்போது, 2 வயது குழந்தை மற்றும் 24 வயது நபர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 2 வயது குழந்தை பிறவி எலும்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது, முதியவர் சிறுநீரக நோயால் இறந்துள்ளார்.

24 வயது ஆண் நிமோனியா தொற்றினால் குருதியில் ஏற்பட்ட நச்சால் உயிரிழந்துள்ளார்.

இவர்களின், ரத்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் பரிசோதனை முடிவு வந்த பின்னரே அவர்களை கொரோனா தாக்கியதா என்பது தெரியவரும்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்