நடிகர் கமல்ஹாசன் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு! வீட்டு சுவரில் நோட்டீஸ்

Report Print Raju Raju in இந்தியா

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணம் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் மொத்த மாநிலங்களிலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதன் அறிகுறியோடு இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள வீட்டில் தான் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவரது வீட்டு சுவரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது, இதனிடையில் அந்த நோட்டீஸ் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்