என் கணவருக்கு கொரோனா!... ரத்த வாந்தி எடுத்து இறந்த வழக்கில் அம்பலமான உண்மைகள்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கணவர் கொரோனாவால் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்ததாக மனைவி கூறிய நிலையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெங்களூரை சேர்ந்த மஞ்சுநாதன்(48) புதுச்சேரியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார்.

இவருக்கு சத்யா (39) என்ற மனைவியும் இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். நேற்று காலை 11 மணிக்கு மஞ்சுநாதன் இரத்த காயங்களுடன் வீட்டில் மயங்கி கிடந்தார்.

அப்போது அவரது மனைவி வெளியே வந்து கணவருக்கு கொரோனா நோய் வந்து விட்டது எனவும் அதனால் தான் இரத்த வாந்தி எடுக்கிறார் எனவும் கத்தியுள்ளார்.

இதனையடுத்து நர்சிங் படிக்கும் அவரது மகள் சரளா ஆம்புலன்சை வரவழைத்து தந்தையை அரசு மருத்துவனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு மஞ்சுநாதனை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் எனவும் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக பொலிசார் வந்து மஞ்சுநாதன் மனைவி சத்யாவிடம் விசாரித்தனர்.

அப்போது பொலிசாரிடம் மஞ்சுளா, என் கணவருக்கு பேய் பிடித்து இருந்ததாகவும், அவரை கொரோனா வைரஸும் தாக்கியதாகவும் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

ஆனால் பொலிசாரின் கிடுக்குபிடி விசாரணையில் அனைத்து விடயங்களையும் சத்யா கூறினார்.

அதன்படி குடிபழக்கம் கொண்ட மஞ்சுநாதன் ஊடரங்கு உத்தரவால் கடந்த 10 நாட்களாய் குடிக்க முடியாமல் மனநலம் பாதித்தபடி இருந்துள்ளார்.

நேற்று காலை மீண்டும் அவர் பேய் வந்தது போல் அட்டகாசம் செய்துள்ளார். இதனால் அவரை குடும்பத்தார் கை கால்களை கட்டியுள்ளனர். இதனையும் மீறி அவர்கள் மனைவி மற்றும் மகள்களை தாக்கியுள்ளார்.

இதில் ஆவேசமடைந்த சத்யா கட்டையால் கணவரை தாக்கியுள்ளார். இதனால் சில நிமிடங்களில் அவர் இறந்துள்ளார். சம்பவத்தை மறைக்க, கணவருக்கு கொரோனா என சத்யா நாடகமாடியுள்ளார் என தெரியவந்தது.

இதை தொடர்ந்து சத்யாவை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்