மகள் திருமணத்திற்கு நேரில் அழைத்த ரிக்‌ஷா ஓட்டுனரை நேரில் சந்தித்த மோடி: வெளியான புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

இந்தியா பிரதமர் நரேந்திர மோடி மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்த சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுனரை நேரில் அழைத்து பேசியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியின் பாராளுமன்ற தொகுதியான வாரணாசியை சேர்ந்த ரிக்‌ஷா ஓட்டுனர் மங்கள் கேவத் என்பவர் தன்னுடைய மகளின் திருமணத்தில் கலந்து கொள்ளும் படி, மோடிக்கு அழைப்பிதழ் ஒன்றை அனுப்பியிருந்தார்.

ஆனால் இந்த திருமணத்திற்கு மோடியால் செல்ல முடியவில்லை. இருப்பினும் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், மோடி வாரணாசிக்கு ஒருநாள் பயணம் மேற்கொண்ட போது மங்கள் கேவத்தை நேரில் சந்தித்து அவரது ஆரோக்கியம், குடும்பத்தினர் குறித்து நலம் விசாரித்தார்.

தூய்மை இந்தியா இயக்கத்துக்காக மங்கள் கேவத் அளித்த பங்களிப்புக்காக, பிரதமர் மோடி அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.

மோடியின் தூய்மை இந்தியா இயக்கத்தினால் மங்கள் கேவத் தன் கிராமத்தில் கங்கை ஆற்றங்கரையை தானே சுத்தப்படுத்தும் பணியில் இறங்கினார்.

மகள் திருமணத்துக்கு பிரதமர் மோடி வராவிட்டாலும் வாழ்த்துச் செய்தி அனுப்பியது தனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது என்று மங்கள் கேவத் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்