ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்த தாய்! என்ன காரணம்? விசாரனையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் ஒன்றரை வயது மகனை காணவில்லை என்று தாய் புகார் கொடுத்திருந்த நிலையில், அவரே கொலை செய்துவிட்டு, நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ். இவருக்கும் சரண்யா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு வியான் என்ற ஒன்றரை வயது மகன் இருந்தார்.

இந்நிலையில் இந்த தம்பதியினர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தங்களுடைய மகனை காணவில்லை என்று திங்கட்கிழமை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவர்கள் வீட்டின் அருகே உள்ள தாயில் கடற்கரை பகுதியில் குழந்தை வியானின் உடல் கரை ஒதுங்கியுள்ளது பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனால் பொலிசார் வீட்டின் அருகே உள்ள கடற்கரையில் குழந்தையின் சடலம் ஒதுங்கியதால், பிரணவ் மற்றும் சரண்யா மீது சந்தேகம் வலுத்துள்ளது.

இதனால் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு, இருவரின் பதிலும் வெவ்வேறு மாதிரி இருந்ததால், அவர்கள் வீட்டில் பயன்படுத்திய போர்வை, இருவரது உடை உள்ளிட்டவைகளைக் கைப்பற்றி பொலிசார் ஆய்வுக்கு அனுப்பினர்.

ஏனெனில் குழந்தை கடற்கரையி இறந்து கரை ஒதுங்கியுள்ளது. இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் கடற்கரைக்கு சென்றிருந்தால்

நிச்சயம் அதில் உப்பு படிந்திருக்கும் என்ற கோணத்தில் அவர்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

மேலும், தடயவியல் நிபுணர்களும் பிரணவின் வீட்டில் சோதனையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த சூழலில், தான் குழந்தையைக் கொலை செய்ததைத் தாய் சரண்யா ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அதற்கு அவர் பொலிசாரிடம் சொன்ன காரணம் பொலிசாரை மட்டுமின்றி கேரளாவையே அதிரவைத்திருக்கிறது.

சரண்யா கூறுகையில், குழந்தை அழுததும் அதை சமாதானப்படுத்துவதற்காக காலை 2.30 மணிக்கு குழந்தையை கடற்கரைக்கு தூக்கி சென்றேன்.

வீட்டிலிருந்து 100 மீற்றர் தூரமே உள்ள கடற்கரைக்குச் சென்ற பின்னரும் குழந்தை வியான் அழுகையை நிறுத்தாததால், சிறிதுநேரம் அங்கு அமைதிப்படுத்தினேன், அதன் பின் அழுகையை நிறுத்தியதும், கடலை ஒட்டிய பகுதியில் குவிக்கப்பட்டுள்ள கற்குவியலின் கீழ் பாகத்தை நோக்கி குழந்தையை வீசியதாக கூறியுள்ளார்.

பொலிசார் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், குழந்தையை கற்குவியலில் வீசிய இவர், குழந்தையை அலைகள் இழுத்து செல்வதை பார்த்த பின் இறந்ததை உறுதி செய்த பின்னரே சரண்யா வீடு திரும்பியிருக்கிறார்.

பின்னர், காலையில் எழுந்து குழந்தையைக் காணவில்லை என கணவரிடம் கூறி புகார் கொடுத்திருக்கிறார். போர்வை, உடை போன்றவற்றை எடுத்து தடவியல் பரிசோதனைக்கு அனுப்ப நாங்கள் முடிவு செய்தபோது, கொலைக்குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும் பிரணவ் - சரண்யா இடையே கடந்த சில மாதங்களாக பிரச்னை நீடித்து வந்திருக்கிறது. இதனால், விவாகரத்து வாங்க சரண்யா தரப்பில் முடிவுசெய்து, அவருக்கு வேறொரு திருமணம் செய்துவைக்க முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் பிரணவ் மறுத்ததால், சரண்யா குழந்தையைக் கொல்ல முடிவுசெய்து, அதை நிறைவேற்றியிருக்கிறார்.

இப்போது சரண்யாவைக் கைது செய்திருப்பதாக பொலிசர் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்