மகனின் தலை துண்டிக்கப்பட்ட உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய தாயார்: வெளிவரும் பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக சொந்த மகனை கொலை செய்து, உடல் பாகங்களை துண்டாக்கி வீசிய தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்குள்ள தொட்டமன்துறை தடுப்பணை அருகே முல்லைப்பெரியாற்றில் சாக்கு மூட்டையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

அந்த சடலம் கை, கால்கள் மற்றும் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது பொலிசாரை திணற வைத்துள்ளது.

இந்த நிலையில் விசாரணையை முடுக்கிவிட்ட பொலிசார், கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கம்பம் நந்தகோபாலன் கோவில் தெற்கு வாசல்தெருவை சேர்ந்த செல்வி (49), அவருடைய இளைய மகன் விஜய்பாரத் (25) ஆகியோரை கைது செய்து விசாரித்துள்ளனர்.

இதில் செல்வியின் மகன் விக்னேஷ்வரன்(30) என்பவரே கொல்லப்பட்டது தெரியவந்தது. போதை மருந்து பழக்கம், குடும்பத்தில் தகராறு உள்ளிட்டவையே கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

விக்னேஷ்வரனை கொலை செய்த பின்னர் தலை மற்றும் கை, கால்களை துண்டித்து, அடையாளம் தெரியாமல் இருக்க நகரின் பல பாகங்களில் வீசியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவருடைய உடலுடன், குடல் கூட இல்லை என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. அதனை என்ன செய்தார்கள் என்பது குறித்த விசாரணையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

விக்னேஷ்வரனை கொலை செய்த பின்னர் உடல் உறுப்புகளை தனித்தனியாக அரிவாளால் துண்டித்து வீசப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்