9 ஆண்டுகள்... ஒரே குடும்பத்தில் மரணமடைந்த 6 பிள்ளைகள்: உடற்கூராய்வுக்கு மறுத்த பெற்றோர்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் 6 பிள்ளைகள் 9 ஆண்டுகள் இடைவெளியில் மரணமடைந்துள்ள விவகாரத்தில் பொலிசார் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிந்துள்ளனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் ரபீக் மற்றும் சபீனா தம்பதிகளின் 4 பெண் பிள்ளைகளும் 2 ஆண் பிள்ளைகளும் கடந்த 9 ஆண்டுகளில் திடீரென்று மரணமடைந்துள்ளனர்.

பிறந்து வெறும் 93 நாட்களேயான இவர்களது 6-வது பிள்ளை இன்று திடீரென்று மரணமடைந்துள்ள தகவல் வெளியானதையடுத்து பொலிசார் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிந்துள்ளனர்.

மரணமடைந்துள்ள 6 பிள்ளைகளும் உடற்கூராய்வுக்கு முன்னரே அடக்கம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் மர்மம் இருப்பதாக பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதாலையே விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் தங்கள் பிள்ளைகள் 6 பேரும் வலிப்பு நோய் காரணமாகவே மரணமடைந்துள்ளதாக ரபீக் மற்றும் சபீன தம்பதி பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி இந்த விவகாரத்தில் தங்களுக்கு புகார் இல்லை என ரபீக் தம்பதியின் உறவினர்கள் பொலிசாரிடம் கூறியுள்ளனர்.

இருப்பினும், பொலிஸ் தரப்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்