விதவைக்கு வாழ்வு கொடுப்பதே லட்சியம் என்ற இளைஞரை நம்பிய கணவரை இழந்த இளம்பெண்! பின்னர் தெரிந்த உண்மை

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் விதவை பெண்ணை திருமணம் செய்வதாக கூறி அவரிடம் பணம், நகைகளை மோசடி செய்த நபருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

சென்னை மாதாவரத்தை சேர்ந்த 24 வயது விதவை பெண் மறுமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் மையத்தில பதிவு செய்து இருந்தார்.

இதனை பார்த்த ரமேஷ் (34) என்பவர், அந்த விதவையை தொடர்பு கொண்டார். தான் துறைமுகத்தில் அதிகாரியாக இருப்பதாகவும், ஒரு விதவையை திருமணம் செய்துகொள்வதே தனது லட்சியம் எனவும் கூறினார்.

இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரமேசுக்கும், விதவை பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்துக்கு 25 பவுன் தங்க நகைகளும், ரூ.1 லட்சமும் வரதட்சணையாக பேசப்பட்டது.

விதவையின் பெற்றோர் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்களுக்கு வழங்கி வந்தனர். நிச்சயதார்த்தம் முடிந்து சில நாட்கள் விதவை வீட்டில் தங்கி இருந்த ரமேஷ், தனது நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வருவதாக கூறிவிட்டு வரதட்சணைக்காக வீட்டில் வாங்கி வைத்து இருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். ஆனால் அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை.

அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அதன்பிறகுதான் வீட்டில் இருந்த நகை, பணம் மாயமாகி இருப்பதை கண்ட விதவையின் பெற்றோர், ரமேஷ் மோசடி செய்துவிட்டதை அறிந்தனர்.

இது குறித்த புகாரில் பொலிசார் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

ரமேசுக்கு, ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணமாகி, 2 குழந்தைகள் இருப்பது தெரிந்தது.

மாமியார் வீடான பம்மலில் வசித்து வந்த ரமேஷ், தான் ஒரு அரசு அதிகாரி என கூறி அந்த பெண்ணை திருமணம் செய்து உள்ளார். ஆனால் திருமணத்துக்கு பிறகு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

மேலும் அவர் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து இருப்பதும் விசாரணையில் தெரிந்தது.

இந்நிலையில் தலைமறைவான ரமேஷை பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்