மின்சாரம் பாய்ந்து இறந்த தாய்... சடலத்தை எழுப்ப போராடிய குட்டி குரங்கு: காண்போரை கலங்க வைக்கும் காட்சி

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் மின்சாரம் பாய்ந்து இறந்த தாயின் சடலத்தை குட்டி குரங்கு எழுப்பிய சம்பவம் வீடியோவாக வெளியாகி நெஞ்சை பதபதைக்க வைத்துள்ளது.

அசாமில் உள்ள ககோஜானா வனப்பகுதியிலே இத்துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மின்சாரம் பாய்ந்து தாய் இறந்த நிலையில், சுற்றி நின்றுக்கொண்டிருந்த மக்களை பார்த்து பயந்த குட்டி குரங்கு, சடலத்தை சுற்றி எழுப்ப முயற்சி மேற்கொள்கிறது.

பின்னர், இருள் சூழ்ந்த நிலையில் இரண்டு நபர்கள் தாய் குரங்கின் சடலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளனர். பின் குட்டி என்ன ஆனது எங்கு சென்றது என தெரியவில்லை.

குறித்த சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். வைரலான காட்சி காண்போரை கலங்க வைத்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்