கொலையில் முடிந்த முறையற்ற உறவு! 14 ஆண்டுகளுக்கு பின் மருத்துவ பட்டம் பெற்ற நபர்... ஆரவாரம் செய்த மாணவர்கள்

Report Print Abisha in இந்தியா

14 ஆண்டுகள் சிறையில் இருந்த நபர், தற்போது மருத்துவர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்தவர், சுபாஷ் துகாராம் பாட்டீல். இவர், 2002 ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தவேளையில், வாடகைக்கு குடியிருந்த வீட்டின் அருகில் இருந்த பத்மாவதியுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

பத்மாவதி அசோக் குத்தேதார் என்பவருடன் ஏற்கனவே திருமணமானவர் ஆவார். இதனால், அசோக் சுபாஷை அழைத்து கண்டித்துள்ளார்.

இதை விரும்பாத சுபாஷ், அசோக் குத்தேதாரை 2002ஆம் ஆண்டு கொலை செய்துள்ளார். இதில், அவருக்கு 14ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறையில், இருந்த சுபாஷ் முதுகலை இதழியல் பட்டம் முடித்துள்ளார். கடந்த 2016 ஆகஸ்ட் 15ஆம் திகதி தண்டனை முடிந்து சுபாஷ் வெளியில் வந்துள்ளார். நேராக தான் படித்து பாதியில் விட்ட மருத்துவ படிப்பை தொடர அனுமதி கோரி ராஜிவ் காந்தி சுகாதார மற்றும் அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து பேசியுள்ளார்.

சுபாஷின் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் மீதியுள்ள இரண்டாண்டுகள் முடிக்க துணைவேந்தர் அனுமதி வழங்கினார். அதன்படி, கல்புர்கியில் உள்ள கர்நாடக கல்வி குழுமத்தின் மகாதேவப்பா ரேவூரா மருத்துவக் கல்லூரியில் சுபாஷ் சேர்ந்து படித்தார்.

தன்னை விட 18 வயது குறைவான மாணவ, மாணவிகளுடன் எந்த கூச்சமுமில்லாமல் படித்து தேர்ச்சி பெற்றார். ரெகுலராக படிக்கும் மாணவர்களே பரிட்சையில் பெயில் ஆகி அரியவர் வைத்து வருகிறார்கள். இந்நிலையில் படித்த இரண்டாண்டு தேர்வில் எந்த அரியரும் இன்றி சுபாஷ் தேர்ச்சி பெற்றுள்ளார்.

கல்லூரியில் பட்டமளிப்பு விழா 2 நாட்களுக்கு முன் நடந்திருக்கிறது. இதில் மருத்துவ பட்டம் முடித்த சுபாஷ் பட்டம் பெற்றுள்ளார். அவரை சக மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டினார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்