சீமானுடன் தனிமையில் இருந்த வீடியோ! என்னை சாவடிக்க முயற்சி.. முகம் சிவந்த நிலையில் விஜயலட்சுமியின் அடுத்த வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

சீமான் மீது பாலியல் புகார் கொடுத்ததற்காக பல முறை தன்னை சாவடிக்க முயற்சி நடந்ததாகவும், தான் அதிலிருந்து உயிர் தப்பி பிழைத்ததாகவும் நடிகை விஜயலட்சுமி புதிய புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அண்மை காலமாக அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகிறார்.

தஞ்சை பெரிய கோவிலில் சீமானை வழிபாடு நடத்த அனுமதியளித்ததற்கு கண்டனம் தெரிவித்த விஜயலட்சுமி, தொடர்ந்து சீமான் உடன் தான் பழகிய நாட்களை நினைவூட்டும் விதமாக அந்தரங்க வீடியோக்களையும் வெளியிட்டார்.

இதற்கு பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பிய சீமான், தன்னை எதிர்ப்பவர்கள் எல்லாம் தனது எதிரி அல்ல என்றும் தான் யாரை எதிர்க்கிறேனோ அவர்கள் மட்டுமே தனது எதிரி என்று விளக்கமளித்தார்.

இந்த நிலையில் மீண்டும் முகம் சிவந்த நிலையில் கோபமாக சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சீமான் மீது பாலியல் புகார் தெரிவித்ததால் தன்னை சாவடிக்க பலமுறை முயற்சிகள் நடந்ததாகவும் அதில் இருந்து தான் தப்பி பிழைத்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் தன்னை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடும் சீமானின் ஆட்கள் அவரின் மவுத் பீஸ் என்றும் விஜயலட்சுமி கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்