பின்னணி பாடகி சுஸ்மிதா தற்கொலை..! கடைசியாக தாய்க்கு அனுப்பிய மெசேஜ்

Report Print Vijay Amburore in இந்தியா

பிரபல கன்னட பாடகி சுஸ்மிதா அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட பின்னணி பாடகி சுஷ்மிதா (27), தனது தாயின் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

சுஷ்மிதா ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கனகாபுராவைச் சேர்ந்த சரத் என்பவரை மணந்தார். திருமணம் முடிந்ததிலிருந்தே கணவரின் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

இதனால் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றிருந்த சுஸ்மிதா, அதனையே நினைத்துக்கொண்டு கவலையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சுஸ்மிதா, தற்கொலைக்கான காரணம் குறித்து தனது சகோதரன் சச்சினுக்கு வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் செய்திருந்துள்ளார்.

அதில், எனது மரணத்திற்கு கணவர் சரத், வைதேஹி மற்றும் கீதா ஆகியோர் நேரடியாக காரணம். நான் அவர்களின் கால்களை பிடித்து எவ்வளவு கெஞ்சினாலும், பிச்சை எடுத்தாலும், அவர்களுடைய வன்முறையும், சித்ரவதையும் குறையவே இல்லை.

நான் தற்கொலை செய்துகொள்வது உங்களுக்கு வருத்தமாக இருக்கலாம். என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. மாமியார் கூறுவதை கேட்டுக்கொண்டு என் கணவர் என்னை தினமும் சித்ரவதை செய்தார்.

ஒவ்வொரு நாளும் வீட்டைவிட்டு போகுமாறு என்னை தொந்தரவு செய்தனர். எனக்கு நடந்த வன்முறை பற்றி நான் யாரிடமும் கூறியது இல்லை. எனது மரணத்திற்கு காரணமான யாரையும் விட்டுவிடாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியருக்கும் நிலையில் பொலிஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்