நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மார்ச் 3ஆம் திகதி தூக்கு தண்டனை! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

Report Print Raju Raju in இந்தியா
293Shares

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நால்வருக்கும் வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் அக்சய் தாகூர், பவன் குப்தா, முகேஷ் சிங், வினய் சர்மா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 22ம் திகதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், பின்னர் பெப்ரவரி 1ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் புதிய மனுக்களை தாக்கல் செய்ததால் தண்டனையை நிறைவேற்றுவதில் சட்ட சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய திகதியை அறிவிக்கக்கோரி, திகார் சிறை நிர்வாகம் மற்றும் நிர்பயாவின் பெற்றோர் சார்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று வந்த நிலையில் நால்வருக்கும் மார்ச் மாதம் 3ஆம் திகதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கூறுகையில், நான் பெரிதாக மகிழ்ச்சியடையவில்லை. ஏனெனில் மூன்றாவது முறையாக இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளோம், ஆனாலும், இறுதியாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது திருப்தியளிக்கிறது.

3ஆம் திகதி குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்