சீனாவில் இருந்து ஊருக்கு திரும்பிய தமிழர் உயிரிழப்பு! அவர் உடல்நிலையை பரிசோதிக்கவில்லை என அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in இந்தியா
1334Shares

சீனாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய தமிழர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் புதுக்கோட்டை அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் சக்திகுமார்.

சீனாவில் இருந்த இவர் கடந்த 4-ஆம் திகதி சொந்த ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மதுரை தனியார் ‌மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சக்திகுமார் கடந்த 14-ஆம் திகதி உயிரிழந்தார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு மற்றும் மஞ்சள் காமாலை இருந்ததாக கூறப்படுகிறது‌.

சக்திகுமார் இறந்தது குறித்து சுகாதாரத்துறையிடம் கேட்டபோது தான் அவர் சீனாவில் இருந்து திரும்பியவர் என்பதே அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

சீனாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்புகிறவர்கள் நிச்சயம் 14 நாட்கள் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

ஆனால் ஊர் திரும்பியவர்களை கண்காணித்து வருவதாக கூறும் நபர்களின் பட்டியலில் சக்திகுமார் பெயர் இடம்பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்