படித்துக்கொண்டிருந்த மாணவர்களை கொடூரமாக தாக்கிய பொலிஸ்! நாட்டையே உலுக்கிய சம்பவத்தில் புதிய சிசிடிவி காட்சி வெளியீடு

Report Print Basu in இந்தியா

2019 டிசம்பர் 15ம் திகதி டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களை பொலிசார் காட்டுமிராண்டித் தனமாக தாக்கும் புதிய சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தின் போது பொலிசார், டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் நுழைந்து மாணவர்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படத்தியது.

இந்நிலையில், 2019 டிசம்பர் 15ம் திகதி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக நூலகத்திற்கு அதிரடியாக நுழைந்த பொலிசார், அங்கு படித்துக்கொண்டிருந்த மாணவர்களை சரமாரியாக தாக்கும் புதிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜே.சி.சி என்றழைக்கப்படும் ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளது. டெல்லி காவல்துறையின் கொடூர காட்சிகள் குறித்தும் ஜே.சி.சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகள் பொலிஸ் படைகளின் மிருகத்தனமான செயலையும், நூலகத்திற்குள் தேர்வுக்கு படித்து கொண்டிருந்த ஜாமியா மாணவர்கள் மீது அரச பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான விளையாட்டை காட்டுகிறது என்று ஜே.சி.சி அறிக்கையில் கூறியுள்ளது.

வெளியாக புதிய சிசிடிவி காட்சிகள் குறித்து பதிலளித்த டெல்லி பொலிசார், இந்த வழக்கு ஏற்கனவே குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அந்த வீடியோ விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்