திருமணத்தின் போது அனைவரையும் வாய்பிளக்க வைத்த மணப்பெண்! வீடியோ வெளியான இரு மாதத்தில் சடலமாக மீட்பு

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமணத்தின் போது அசத்தலாக நடனமாடி பெரியளவில் வைரலான புதுப்பெண் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவுகாத்தியை சேர்ந்தவர் மர்சி போரா. இளம்பெண்ணான இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

திருமண நிகழ்வின் போது மணமேடையில் போரா அசத்தலாக நடனம் ஆடினார். இதை பார்த்து கணவரும் அங்கிருந்த உறவினர்களும் வாயை பிளந்தனர்.

இது தொடர்பான வீடியோ பெரியளவில் சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் திருமணமான 2 மாதத்தில் சரியாக கடந்த 14ஆம் திகதி காதலர் தினத்தன்று கணவர் வீட்டில் சடலமாக போரா தொங்கினார்.

இந்த சமயத்தில் போராவின் கணவர் மும்பையில் இருந்துள்ளார்.

இவ்வழக்கை பொலிசார் தற்கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.

இருந்த போதிலும் போரா மரணத்தில் மர்மம் இருப்பதாக அவர் குடும்பத்தார் கூறியுள்ளதோடு, முறையான விசாரணை வேண்டும் என கோரியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்