நள்ளிரவில் கிராமத்தை விட்டு துரத்தப்பட்ட இரு இளம்பெண்கள்! டிக் டாக்கால் விபரீதம்.. தலைசுற்றவைக்கும் சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் இளம்பெண்ணையும் அவரது சகோதரியையும் கிராம மக்கள் நள்ளிரவில் அடித்து ஊரை விட்டு துரத்தியதற்கு டிக்டாக் தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தேனிமாவட்டம் கொடுவில்லார்பட்டியை அடுத்த நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த மதுரைசுகந்தி என்பவர் டிக்டாக்கில் மிக பிரபலம்.

கணவர் பட்டாளத்தில் வேலைப்பார்ப்பதாக கூறி வந்த சுகந்தி டிக்டாக்கில் முக்கல் முனங்கல் பாடல்களுக்கு வீடியோ வெளியிட்டு ஆண் நண்பர்களுடன் பொழுதை கழித்து வந்ததாக கூறப்படுகின்றது.

ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் போக்குவரத்துமாக இருந்ததால் சுகந்திக்கு டிக்டாக்கில் கடும் அர்ச்சனை விழுந்தது. எதற்கும் அசராமல் சுகந்தி வீடியோ பதிவிட்டு வந்தார்.

அண்மையில் இரு பெண்கள் சுகந்திக்கும் அவரது காதலனுக்கும் எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது கூட காவல் நிலையத்துகே சென்று டிக்டாக் செய்து சவால் விடுத்தவர் சுகந்தி.

இந்த நிலையில் டிக்டாக்கில் சுகந்திக்கும் இளைஞர் ஒருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதில் சுகந்தியை விமர்சித்து டிக்டாக் பதிவிட்ட அந்த இளைஞர், நாகலாபுரம் கிராமத்தில் உள்ள பெண்களையும் சேர்த்து விமர்சித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நாகலாபுரம் கிராம மக்கள் டிக்டாக்கில் டவுன் பஸ் போல வலம் வந்த சுகந்தியையும் அவரது சகோதரியையும் ஊரைவிட்டு துரத்தி அடிக்க நள்ளிரவில் பொங்கி எழுந்தனர்.

எக்காரணத்தை கொண்டும் ஊருக்குள் வரக்கூடாது என்று விரட்டிய மக்கள், சுகந்தியையும் அவரது சகோதரியையும் ஊரில் இருந்து நிரந்தரமாக வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் பழனிச்செட்டிப்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் என்று கொந்தளித்த நாகலாபுரம் கிராம மக்களிடம், சைபர் கிரைம் பொலிசார் உதவியுடன் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து நகலாபுரம் கிராமத்து மக்கள் கலைந்து சென்றார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்