சீன அதிபரை இழிவுபடுத்தும் கார்ட்டூனை வெளியிட்ட மாணவர் கைது!

Report Print Vijay Amburore in இந்தியா

சீன அதிபரை இழிவுபடுத்தும் கார்ட்டூனை வெளியிட்ட பல்கலைக்கழக மாணவனை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மினசோட்டா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 20 வயதான லுயோ டெய்கிங் என்கிற மாணவர், கடந்த ஜூலை மாதம் தனது சொந்த ஊரான வுஹானில் விடுமுறையில் இருந்த போது சீன அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

அவர், 'ஒரு தேசியத் தலைவரின் உருவத்தை இழிவுபடுத்துதல் மற்றும் அநாகரீகமான படங்கள்' என 40 க்கும் மேற்பட்ட ட்வீட்களை வெளியிட்ட பின்னர், 'எதிர்மறையான சமூக தாக்கத்தை உருவாக்கியவர்' என்று குற்றம் சாட்டப்பட்டு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

Lawrence Limburger என்கிற கதாபாத்திரம் சீன அதிபர் ஜின்பிங்கை ஒத்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல Winnie the Pooh என்கிற கரடியை அதிபர் ஜின்பிங்குடன் மக்கள் ஒப்பிட்டதிலிருந்து அது சீனாவில் தணிக்கை செய்யப்பட்டது.

அப்படி இருக்கையில், லுயோ Winnie the Pooh-ன் படத்தை மறு ட்வீட் செய்தபோது சிக்கியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...