முட்புதரில் கிடந்த பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை: பாதி உடலை கடித்து குதறிய நாய்கள்

Report Print Vijay Amburore in இந்தியா

ஓசூர் அருகே பிறந்து 2 நாட்களே ஆன பிஞ்சுக்குழந்தையின் சடலம் முட்புதரில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் மாநகராட்சி அருகே மத்தம் அக்ரகாரம் பகுதியில் உள்ள முட்புதரில் பிஞ்சுக்குழந்தை ஒன்றின் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், நாய்கள் கடித்து குதறியதால் எஞ்சியிருந்த பாதி உடலை மட்டும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலமாக கண்டெடுக்கப்பட்ட குழந்தை ஆணா? பெண்ணா? என்பது கண்டறிய முடியாத நிலையில், கொலை செய்யப்பட்டதா அல்லது புதைக்காமல் சாலையோரம் வீசி செல்லப்பட்டதா என்கிற கோணத்தில் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

Credit: News7tamil

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...