நடிகர் ரஜினிகாந்த் இனிமே உயிரோடு இருக்க முடியாது! பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

பெரியார் விடயத்தில் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் இனிமேல் உயிருடன் இருக்க முடியாது என பெரியாரின் ஆதரவாளர்கள் பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் பேசியபோது பெரியார் குறித்து கூறிய ஒரு சில கருத்துக்கள் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

பெரியார் குறித்து அவதூறாக ரஜினிகாந்த் பேசி விட்டதாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் குற்றம்சாட்டி வருவதோடு அவர் தனது கருத்தை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ரஜினிகாந்த் வீட்டின் முன் போராட்டம் நடத்திய பெரியாரின் ஆதரவாளர்கள் சிலர் ஆவேசமாக பேட்டி அளித்தபோது தமிழ்நாட்டில் இனிமேல் ரஜினிகாந்த் உயிருடன் இருக்க முடியாது என்றும் அவ்வாறு இருக்க விடமாட்டோம் என்றும் கூறினார்கள்.

மேலும் தமிழகத்தில் இனிமேல் ரஜினி படம் ஓடாது என்றும் ஓட விடமாட்டோம் என்றும் ஆவேசமாக கூறிய அவர்கள் ரஜினியை தமிழ்நாட்டில் இனிமேல் நடமாடவே விடமாட்டோம் என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்கள் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...