ஆசையாக வளர்த்த சண்டை சேவல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த உரிமையாளர்

Report Print Vijay Amburore in இந்தியா

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் ஆசையாக வளர்த்த சேவல் தாக்கியதில் அதன் உரிமையாளரே பரிதாபமாக உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1960-ஆம் ஆண்டு விலங்குகளுக்கான கொடுமையைத் தடுக்கும் சட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய உச்சநீதிமன்றத்தால் சேவல் சண்டை தடைசெய்யப்பட்டிருந்தாலும் கூட, இந்தியாவின் பல பகுதிகளிலும் சேவல் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தென்கிழக்கு மாநிலமான ஆந்திராவின் பிரகதவரம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் மகர சங்கராந்தியின் வருடாந்திர இந்து திருவிழாவிற்கான பாரம்பரிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சேவல் சண்டை நடைபெற்றது.

Credit: The Washington Post via Getty Images

இதில் 55 வயதான சின்ன வெங்கடேஸ்வர ராவ் என்கிறவர் தன்னுடைய சேவலுடன் போட்டியில் கலந்துகொள்வதற்காக சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது சேவலின் கால்களின் கட்டியிருந்த பிளேடு கழுத்துப்பகுதியில் தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து கிருஷ்ணா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரநாத் பாபு கூறுகையில், இந்த ஆண்டு திருவிழாவிற்கு முன்னதாக பல சேவல் அரங்கங்களை கண்டுபிடித்து அழித்தோம். அப்படி இருந்தும்கூட மாந்தோப்புகளில் கூடாரங்களை அமைத்து நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது 50 க்கும் மேற்பட்ட சண்டை அமைப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...