உடல் முழுவதும் கீறல்களுடன் வீட்டில் இறந்து கிடந்த 22 வயது பெண்! விசாரணையில் வெளியான அதிரவைக்கும் தகவல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் உடல் முழுவதும் காயங்கள் மற்றும் கீறல்களோடு இளம்பெண் வீட்டில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆதனஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தீபா (22) என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.

இதற்காக ஆதனஞ்சேரியில் தீபா, ரஞ்சிதா என்ற இளம்பெண்ணுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று ரஞ்சிதா மட்டும் வேலைக்கு சென்றுள்ளார். தீபா நாள் முழுக்க வீட்டில் இருந்தார். மாலை வேலை முடிந்து ரஞ்சிதா வீட்டிற்கு வந்தபோது வீடு திறந்து கிடந்தது.

அப்போது தீபா தூங்கி கொண்டே இருந்துள்ளார். ரஞ்சிதா அவரை எழுப்ப முயன்றதோடு பலமுறை குரல் கொடுத்தும் தீபா எழவே இல்லை.

அருகில் சென்று பார்த்த போது தீபாவின் உடம்பெல்லாம் காயங்களும் கீறல்களும் இருந்தன. அதனால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அழைத்து சென்றார். ஆனால் தீபா உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

மேலும் அவரது உடலில் காயங்கள் உள்ளன, என்றும் மார்பகத்தில் நிறைய கீறல்கள் உள்ளதாகவும் தெரிவித்தனர். கழுத்து பகுதி சிவந்து இருந்தது என்றும் கூறியுள்ளனர்.

இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் மணிஷ் என்பவரை தீபா காதலித்து வந்திருக்கிறார். அவர் சோழிங்கநல்லூலில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பதும் தற்போது மாயமாகி உள்ளதும் தெரியவந்தது.

மணீஷ் தான் இந்த கொலையை செய்திருக்கக்கூடும் என்று முதற்கட்டமாக தெரிவித்துள்ள பொலிசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...