எனது அண்ணி எவ்வளவு அழகாக இருக்கார் பாரு! திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை... அதிர்ச்சி பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்டம் ஒதியடிகுப்பத்தை சேர்ந்தவர் அருள் (38). இவர் பொலிசில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் ராஜேஸ்வரி (30) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்கள் சென்னை மயிலாப்பூர் பொலிஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில் ராஜேஸ்வரி நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் ராஜேஸ்வரி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் ராஜேஸ்வரியின் தம்பி சரவணன் பட்டினப்பாக்கம் பொலிசில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், எனது அக்கா ராஜேஸ்வரி கடந்த 20ம் திகதி என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் எனது கணவரும், அவரது அண்ணி வெண்ணிலாவும், நீ வரும் போது என்ன கொண்டு வந்தாய், நாங்கள் சந்தோஷமாக இருக்க நீ இடையூறாக இருக்கிறாய், நீ வீட்டை விட்டு வெளியே போ அல்லது செத்து விட்டால் சொத்து அனைத்தும் எனக்கே கிடைக்கும் என்று கூறி தினமும் கொடுமைப்படுத்துகிறார்கள் என கூறி அழுதார்.

மேலும் எனது அண்ணி எவ்வளவு அழகாக இருக்கிறார் பார் என்றும், தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காட்டியும் எனது கணவர் என்னை அடித்து துன்புறுத்துகிறார் என்று எனது அக்கா கூறினார்.

எனவே எனது அக்காவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து பொலிசார் தங்கள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...