எங்களுக்கு எதிரியாக இருக்கும் தகுதி ரஜினிக்கு இல்லை - நாம் தமிழர் இடும்பாவனம் கார்த்தி!

Report Print Vijay Amburore in இந்தியா

பிரபல நடிகர் ரஜினி தங்களுக்கு எதிரியாக இருக்கும் அளவிற்கு தகுதி இல்லாதவர் என நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி பேசியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற துக்ளக் பத்திரிக்கையின் 50வது ஆண்டு விழாவில், சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினி கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், "1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணியில் ராமர், சீதையின் சிலைகள் உடையில்லாமல் செருப்பு மாலை அணிவித்து கொண்டு செல்லப்பட்டது.

அதனை எந்த செய்தி தாள்களும் வெளியிடவில்லை. துக்ளக் இதழின் ஆசிரியர் சோ, அட்டைப்படத்தில் போட்டு கடுமையாக விமர்சித்தார்.

இதனால், அப்போதைய தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்ததையடுத்து, பத்திரிகை பிரதிகளை கைப்பற்றினார்கள்" என்று குறிப்பிட்டார்.

ரஜினியின் இந்த பேச்சிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், காவல் நிலையங்களில் புகார் கொடுத்ததோடு, ரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி, "இல்லாததை ஒன்றும் நான் பேசவில்லை. இந்து குழுமத்தின் அவுட்லுக் இதழில் 2017ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளதை வைத்தே நான் பேசினேன் எனக்கூறியதோடு, மன்னிப்பு கேட்க முடியாது" என தெரிவித்தார்.

இதனால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ரஜினியை, ஆளும் அதிமுக, எதிர்க்கட்சிகள் துவங்கி நாம் தமிழர் கட்சியினர் வரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

இதுகுறித்து நமது ஐபிசி தமிழுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தியிடம், ரஜினியை அடுக்கடி விமர்சிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், எங்களுடைய எதிரிக்கு ஒரு தகுதி வேண்டும், அந்த தகுதி ரஜினிக்கு கிடையாது என பேசியுள்ளார்.

அதன்முழு காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது...

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...