ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட பெல்ட் வெடிகுண்டில் வெளிநாட்டு தொடர்பு: பேரறிவாளன்! தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

Report Print Raju Raju in இந்தியா

பேரறிவாளன் வழக்கு தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் சார்பில் அவர் தண்டனையை நிறுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக சிபிஐ உச்சநீதிமன்றத்தில் அளித்த விளக்கத்தில், ராஜீவை கொல்ல பயன்படுத்திய பெல்டு வெடிகுண்டு தொடர்பான விபரங்கள் கிடைக்கவில்லை.

பெல்ட் வெடிகுண்டில் வெளிநாட்டு தொடர்பு என்கிறார் பேரறிவாளவன்.

வெளிநாடுளில் சென்று விசாரிக்க பல வழிமுறைகள் இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பேசிய நீதிபதி நாகேஸ்வர ராவ், வெடிகுண்டு தயாரிக்க பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ புதிய அறிக்கையை தாக்கல் செய்ததா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

இதோடு, பேரறிவாளன் விடுதலைக்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன எனவும், அவரின் விடுதலைக்கு தாமதம் ஏன் எனவும் கேள்வியெழுப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...