பெரியார் செருப்பால் அடித்ததாக கூறிய விவகாரம்..! மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது: நடிகர் ரஜினிகாந்த் அதிரடி

Report Print Basu in இந்தியா

பெரியார் குறித்து தான் கூறிய கருத்து தொடர்பில் மன்னிப்பு கேட்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற துக்ளக் வார இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், பெரியார் நடத்திய மாநாட்டில் ராமர் படத்தை அவர் செருப்பால் அடித்தார். அதுதொடர்பாக செய்தி வெளியிட்ட துக்ளக் இதழுக்கு கருணாநிதி அரசு தடைவிதித்தது.

துக்ளக் ஆசிரியர் சோவை நாடு முழுவதும் பிரபலமாக்கி இருவரில் கருணாநிதியும் ஒருவர் என்று பேசியிருந்தார். அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதே சமயம், பெரியார் உண்மையில் ராமர் படத்தை செருப்பால் அடித்தாரா? என்ற கேள்வியும் எழுந்தது.

இதற்கு திராவிட இயக்கங்கள் உட்பட பிரதான கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், ரஜினி மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தினர்.

1971-ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை சேலத்தில் நடத்தினார் பெரியார். அப்போது திடீரென ஒற்றைச் செருப்பு ஊர்வலத்துக்கு நடுவில் வந்து விழுந்தது.

திராவிடர் கழகத் தொண்டர் ஒருவர் கீழே விழுந்த செருப்பைக் கொண்டு ஊர்வலத்தில் கொண்டுவரப்பட்ட ராமனின் படத்தைத் தாக்கினார். அந்தச் செய்தி சர்ச்சை ஏற்படுத்தியது என கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், துக்ளக் 50வது ஆண்டு விழாவில் நான் பேசியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 1971ம் ஆண்டு அப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை என கூறப்படுகிறது.

2017ம் ஆண்டு வெளியான இந்து குழுமத்தின் வார இதழான ‘அவுட்லுக்’ இதழில் கூட, 1971ல் நடந்த மாநட்டில் ராமர் சீதையின் உருவ பொம்மை உடையில்லாமல் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலத்தில் கொண்டு வந்ததாக வெளியிடப்பட்டிருக்கிறது.

எனவே, நடக்காத விஷயத்தை நான் கூறவில்லை, கற்கனையாக எதையும் செல்லவில்லை. நான் கேள்விப்பட்டது, இதுபோன்ற இதழ்களில் வந்ததை தான் நான் கூறினேன்.

எனவே, இதற்காக நான் மன்னிப்பு கேட்க முடியாது, வருத்தம் தெரிவிக்க முடியாது என தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என அதிரடியாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...