பிச்சைக்காரனின் ஆங்கில புலமையால் வியப்பு! முன்னர் லட்சங்களில் சம்பாதித்தவர் என தெரிந்த உண்மை! அதிரடி திருப்பம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் பிச்சையெடுத்து வந்த நபர் அதிகம் படித்த பொறியாளர் என தெரியவந்த நிலையில் குடும்பாதாருடன் அவர் ஒன்று சேர்ந்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் ஜகன்நாதன் கோவில் வாசலில் பிச்சையெடுத்து வருபவர் கிரிஜா சங்கர் மிஸ்ரா (51).

சில தினங்களுக்கு முன்னர் இவருக்கும் ஆட்டோ ஓட்டுனர் ஒருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில் இருவரும் சாலையில் கட்டி புரண்டு அடித்து கொண்டனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று புகார் மனுவை எழுத சொன்னார்கள்.

அப்போது பிச்சைக்காரன் சங்கர் சரளமான ஆங்கிலத்தில் தவறின்றி புகாரை எழுதியதை பார்த்து பொலிசார் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தனர்.

இது குறித்த விசாரணையில் சங்கரின் தந்தை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி என தெரியவந்தது.

மேலும் அவரின் சொந்த ஊர் புவனேஷ்வர் எனவும்,சங்கரின் சகோதரர்கள் அனைவரும் வெளிநாட்டில் செட்டில் ஆனதும் தெரியவந்தது.

இதோடு சங்கர் தான் ஒரு பொறியியல் பட்டதாரி எனவும் படித்து முடித்துவிட்டு லட்சக்கணக்கான சம்பளத்தில் பெரிய பணியில் இருந்ததாகவும் கூறினார்.

ஆனால் பணியில் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து அதிலிருந்து விலகி பல வருடங்களாக பிச்சை எடுத்து வந்தது தெரிந்தது.

இது தொடர்பான செய்தி ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் வைரலானது. இதனிடையில் இந்தியாவில் சங்கர் குடும்பத்தார் வசிக்கிறார்களா என்பது குறித்து அவர் எதுவும் கூறாமல் இருந்தார்.

இந்நிலையில் இதில் திடீர் திருப்பமாக புவனேஸ்வரில் இருந்த சங்கரின் மூத்த சகோதரி மற்றும் அவர் கணவர் சங்கரை தேடி வந்து அவரை நேற்று சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...