கமல்ஹாசன் அரசியலில் ஜெயிப்பாரா? மகள் ஸ்ருதிஹாசன் பேட்டி

Report Print Fathima Fathima in இந்தியா

தனது தந்தை கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து ஸ்ருதிஹாசன் பேட்டியளித்துள்ளார்.

மதுரையில் கடை திறப்பு விழாவிற்காக வந்த நடிகை ஸ்ருதிஹாசனிடம் அவரது தந்தை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இதுகுறித்து அவர் கூறுகையில், அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, என்னுடைய ஆதரவு எனது தந்தைக்கு தான்.

சிறுவயதில் இருந்தே சமூக சேவைகளில் எனது தந்தை ஈடுபட்டு வருகிறார், அரசியல் களத்தில் ஜெயிப்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எனது தந்தையும், ரஜினிகாந்தும் இணைவது அவர்களது முடிவு, இதைபற்றி நான் கருத்து கூறினால் தவறாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் தனது தந்தையை போன்றே சினிமாவில் தானும் ஜெயிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...