60 வயது பாட்டியை திருமணம் செய்து கொண்ட 20 வயது வாலிபர்! இருவருக்கும் எப்படி காதல் ஏற்பட்டது தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் 60 வயது பாட்டி மீது காதலில் விழுந்த 20 வாலிபர் அவரையே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் ராம்பூரை சேர்ந்தவர் கேசவர்த்தி (60). விதவையான இவர் தனியாக வசித்து வந்தார்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் ராகேஷ் பால் (20) என்ற இளைஞர் கேசவர்த்தி செல்போனுக்கு தவறுதலாக போன் செய்துள்ளார்.

அதுவே அவர்களின் காதல் வாழ்க்கைக்கு தொடக்க புள்ளியாக இருக்க போகிறது என்பதை இருவரும் உணரவில்லை.

ஒருவரின் பேச்சு இன்னொருவருக்கு பிடித்துவிட கேசவர்த்தியும், ராகேஷும் போன் மூலம் அடிக்கடி பேசினார்கள்.

பின்னர் வீடியோ அழைப்பு மூலமும் பேச தொடங்கினார்கள். இதையடுத்து கேசவர்த்தியை காதலிப்பதாக ராகேஷ் அவரிடம் கூறினார்.

இதை 60 வயதான கேசவர்த்தியும் ஏற்று கொண்டார். இதன்பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன், மனைவியாக மாற முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன் தினம் ராகேஷ், கேசவர்த்தி வீட்டுக்கு வந்தார். அந்த பகுதி மக்கள் முன்னிலையில் கேசவர்த்திக்கு தாலி கட்டி மனைவியாக ஏற்று கொண்டார்.

60 வயது பாட்டிக்கும், 20 வயது வாலிபனுக்கும் நடைபெற்ற இந்த திருமணம் தான் தற்போது அவர்கள் வசிக்கும் பகுதியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...