திருமண ஆசையில் இருந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! இளைஞனின் உண்மை முகம் அம்பலம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜசிம்மன் (46). இவர், திருமணம் செய்துகொள்ள பெண் தேவை என்று தனியார் இணையதளம் ஒன்றில் விளம்பரம் கொடுத்துள்ளார்.

இந்த விளம்பரத்தை கண்ட ஹைதரபாத்தை சேர்ந்த உமாராணி(42) என்ற பெண், குறித்த இணையதளத்தில் இருந்த ராஜசிம்மனின் தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, இருவரும் தங்களது விவரங்களை பகிர்ந்து கொண்டு, திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கடந்த 6 மாதங்களாக இருவரும் செல்போனில் அடிக்கடி பேசியதால் நெருக்கம் ஏற்பட்டது. ராஜசிம்மன், தனக்கு செலவுக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் உமாராணியிடம் கேட்டுள்ளார்.

அவரும், திருமணம் செய்யப்போகும் நபர்தானே என, அவர் கேட்கும் பணத்தை அவ்வப்போது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். மேலும், சொந்தமாக தொழில் தொடங்கப்போவதாக கூறி, அந்த பெண்ணிடம் இருந்து ரூபாய் 27 லட்சம் வரை வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஒரு கட்டத்தில் உமாராணி என்னை எப்போது திருமணம் செய்துகாள்ள போகிறீர்கள் என்று ராஜசிம்மனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பல்வேறு காரணங்களை கூறி திருமண பேச்சை தவிர்த்துள்ளார்.

இந்நிலையில், ராஜசிம்மன் செல்போனுக்கு அந்த பெண் தொடர்புகொண்டபோது, பல நாட்களாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து குறித்த இணையதளத்தில், பதிவு செய்திருந்த முகவரியை வைத்து சென்னைக்கு வந்து, ஆயிரம் விளக்கு பகுதியில் தேடி பார்த்துள்ளார்.

எங்கு தேடியும் கிடைக்காததால் வேறுவழியின்றி ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், ராஜசிம்மன் திருச்சியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பொலிசார் திருச்சிக்கு சென்று ராஜசிம்மனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

இதேபோல் ராஜசிம்மன் வேறு பெண்களை ஏமாற்றியுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...