தலையில் துப்பாக்கி குண்டுடன் 7 கிலோ மீற்றர் பயணம் செய்த பெண்மணி: வெளியான காரணம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் பஞ்சாபில் சொத்து விவகாரத்தில் 42 வயது பெண்மணி மீது அவரது சகோதரரும் அவரின் மகனும் துப்பாக்கியால் தாக்கிய சம்பவம் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் முக்தசர் மாவட்டத்திலேயெ குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இச்சம்பவத்தில் 42 வயதான சுமித் கவுர் என்பவருக்கு தலை மற்றும் முகத்தில் மூன்று துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன.

தொடர்ந்து சகோதரர் மற்றும் உறவினருக்கு எதிராக புகார் அளிக்கும் பொருட்டு, துப்பாக்கி குண்டு காயங்களுடன் அவர் 7 கிலோ மீற்றர் தொலைவு தமது வாகனத்தில் பயணம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தொடர்ந்து சுமித் கவுர் மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டனர்.

இருவரின் புகாரின் அடிப்படையில், துப்பாக்கியால் தாக்கிய சகோதரரையும் அவரது மகனையும் பஞ்சாப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

தந்தையின் மரணத்திற்கு பின்னர் தமக்கு 16 ஏக்கர் அளவுக்கு நிலம் கிடைத்ததாகவும், அந்த நிலத்தை கைப்பற்றும் நோக்கில் தமது சகோதரர் தொடர்ந்து முயன்று வருவதாகவும், தற்போது கொல்ல முயன்றதாகவும் புகாரில் சுமித் கவுர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...