ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ள பதற்றமான சூழலில் இந்தியா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Report Print Raju Raju in இந்தியா

இந்திய விமானங்கள் ஈரான் ,ஈராக் வான் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இதனால் இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. சுலைமானி கொலைக்கு காரணமான அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக ஈரான் அறிவித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள், அதன் கூட்டணி படைகள் உள்ள ராணுவ தளம் மீது மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதனால் அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.

இந்த அபாய சூழலை கருத்தில் கொண்டு இந்தியா தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஈராக் நாட்டுக்கு செல்வதை இந்தியர்கள் முடிந்த அளவுக்கு தவிர்க்க வேண்டும் என அறிவிறுத்தப்பட்டுள்ளது.

இதோடு இந்திய விமானங்கள் ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா வான் பகுதிக்குள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...