மகளை சீரழித்து எய்ட்ஸ் நோயை பரப்பிய தந்தை! தமிழகத்தை உலுக்கிய வழக்கில் அதிரடி தீர்ப்பு

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரை சேர்ந்தவர் குமார் (37), கூலி தொழிலாளி. இவரது மனைவி இறந்த விட்ட நிலையில், தனது 10 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

அந்த சிறுமி வீட்டின் அருகே உள்ள பள்ளி படித்து வந்துள்ளார். சிறுமியின் செயல்பாடுகளில் மாற்றம் தெரியவே பள்ளி ஆசிரியர்கள் விசாரித்த போது, தந்தை குடித்து விட்டு வந்து ஒராண்டாக பாலியல் பலாத்காரம் செய்ததும், வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதும் தெரியவந்தது வந்தது.

இது தொடர்பாக ஆசிரியர்கள் சைல்டு லைனில் புகார் அளித்தனர். மேலும் சிறுமியை மீட்டு அரசு காப்பாகத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் குமாரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் சிறுமி காப்பாகத்தில் இருந்த போது திடீரொன மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்து பார்த்த போது எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது தந்தை குமாரை மருத்துவ பரிசோதனை செய்த போது அவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மூலமாக சிறுமிக்கு எய்ட்ஸ் பரவியிருப்பது உறுதியானது.

இவ்வழக்கு விசாரணை கடந்த 2017ம் ஆண்டு முதல் தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, குமாருக்கு 4 ஆயுள் தண்டனையும், கொலை மிரட்டலுக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.4,500 அபாரதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த ஆயுள் தண்டனை தீர்ப்பில் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...