கழுத்து அறுபட்ட நிலையில் அறையில் கிடந்த இருவர்: துயரச் சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் மாணவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவத்தில், இளைஞருடனான பிரச்னைகளை 8 மாதங்களுக்கு முன்னர் பேசி முடித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட மாணவி அஷிகாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த ஏபரல் மாதம் வெள்ளறட பொலிசாரின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

அஷிகாவுக்கு அனு என்பவர் தொடர்ந்து தொல்லை தருவதாக கூறியே தந்தை புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் முன்னிலையில், இனி அஷிகா தொடர்பில் தமது தலையீடு இருக்காது என அனு உறுதி அளித்திருந்தார்.

ஆனால் இதன் பின்னரும் அஷிகாவும் அனுவுக்கும் இடையே உறவு தொடர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

காரக்கோணம் பகுதியை சேர்ந்த 19 வயதான அஷிகா அரசு கல்லூரி ஒன்றில் பியூட்டிஷன் கோர்ஸ் படித்து வந்துள்ளார்.

அதே பகுதியில் அனு ஆட்டோ சாரதியாக உள்ளார். திங்களன்று பகல் சுமார் 11.30 மணியளவில் நண்பர் ஒருவரின் பைக்கில் அனு அஷிகாவின் குடியிருப்புக்கு சென்று இந்த படுகொலையை செய்துள்ளார்.

manoramanews

குடியிருப்புக்குள் பாய்ந்து சென்ற அனு, கதவை மூடிவிட்டு மறைத்து வைத்திருந்த சோடா போத்தலால் அஷிகாவின் கழுத்தில் குத்தியுள்ளார்.

இதனையடுத்து தாமும் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அஷிகாவின் உறவினர்கள் மட்டுமே அப்போது குடியிருப்பில் இருந்துள்ளனர்.

அஷிகாவின் தாயாரும் தந்தையும் வேலை நிமித்தம் வெளியே சென்றிருந்தனர். குடியிருப்பில் இருந்து அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்று அப்பகுதி மக்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடும் அஷிகாவையும் அனுவையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

மருத்துவமனை செல்லும் வழியில் அஷிகா மரணமடைந்துள்ளார். அபாய கட்டத்தில் இருந்த அனுவை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்ப்பித்தும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது உடற்கூராய்வுக்கு பின்னர் இருவரது சடலங்களையும் உறவினர்களுக்கு அளிக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்