தமிழக ஆளுநர் உரையில், இலங்கை அகதிகள் குறித்த முக்கிய தகவல்!

Report Print Abisha in இந்தியா

இன்று கூடிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், ஆளுநர் உரை இடம் பெற்றிருந்தது.

கூட்டத்தில் பேசிய ஆளுநர், இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்துமாறு குறிப்பிட்டார்.

முன்னதாக குடியுரிமை திருத்தச்சட்டத்தில் இலங்கை அகதிகள் இடம்பெறாத நிலையில், இதற்காக தமிழகம் முழுக்க போராட்டம் வலுத்தது. மேலும், இந்திய முழுவதும் இஸ்லாமியர்களை தவிர்த்து இந்த குடியுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டதால் போராட்டம் தொடர்ந்து வருகின்றது.

இந்நிலையில், ஆளுநரின் உரையில், இலங்கை அகதிகள் குறித்து இடம் பிடித்த தகவல் பெரும் கவனம் பெற்றுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்