வேண்டாம்... விட்டுடுங்க கதறி அழுத படி கெஞ்சியா கல்லூரி மாணவிகள்! துரத்தி துரத்தி தாக்கப்பட்ட கொடூரம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் ஜேஎன்யூ மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், பெண்கள் விடுதியிலும் மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதால், மாணவிகள் தங்களை விட்டுவிடும் படி கெஞ்சிய சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக விடுதியில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அது நேற்று மர்ம நபர்கள் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

அந்த வகையில் மத்திய அரசிற்கு டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ பிரிவான ஏபிவிபி மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்

இந்த தாக்குதலின் போது முகமூடி அணிந்த கும்பல், பெண்கள் விடுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் சில பெண்களும் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். சபர்மதி ஹாஸ்டலில் இரவு முழுக்க இப்படி தாக்குதல் நடந்துள்ளது.

இதன் காரணமாக விடுதிக்குள் இருந்த பெண்கள், பாதுகாப்பிற்காக கதவுகளை சாத்திக் கொண்டு, உள்ளேயே இரவு முழுக்க இருந்துள்ளனர். இந்த கும்பல் முதலில் தாக்க வந்த போது, அங்கிருந்த பெண்கள் அவர்களை தடுத்துள்ளனர். அதை கேட்கவில்லை என்றதும், அவர்களிடம் வேண்டாம் எங்களை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சியுள்ளனர்.

இருப்பினும், அதையும் கேட்காமல் தொடர்ந்து மாணவர்கள் மீது அந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. மிகவும் கூர்மையான, வலுவான ஆயுதங்களை வைத்து தாக்கி இருக்கிறார்கள். பெண்கள், ஆண்கள் , ஆசிரியர்கள் என்று எந்த விதமான பாகுபாடும் தாக்குதல் நடத்தி உள்ளனர். பெண்கள் அழுதுகொண்டே நின்றும் கூட இரக்கமின்றி தாக்கியுள்ளனர்

பெண்களை கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி வைரலாகி வருவதால், இது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கவுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்