பிரியங்காவுக்கு நேர்ந்த அதே கொடூரம்: கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட மற்றொரு இளம்பெண்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்காவின் கொடூர மரணம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதேபோன்ற ஒரு நிலையில், இளம்பெண்ணின் சடலத்தை கண்டெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐதராபாத் நகரில் உள்ள ஷம்சாபாத் பகுதியில் கருகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவர் பிரியங்காவின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் இருந்து சில கிலோ மீற்றர் தொலைவில், இந்த சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் பிரியங்காவின் கொடூர மரணம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையிலேயே, தற்போது இன்னொரு கொலை வெளிச்சத்துக்கு வந்துள்ளத்து.

வியாழக்கிழமை அன்று பிரியங்கா ரெட்டியை கூட்டு வன்புணர்வுக்கு இரையாக்கி, கொலை செய்த பின்னர், சடலத்தை நெருப்பு வைத்து கொளுத்திய நிலையில் ஷாத்நகர் பகுதியில் உள்ள பாலம் ஒன்றில் கீழே கண்டெடுக்கப்பட்டது.

புதனன்று இரவு பணி முடித்து குடியிருப்புக்கு திரும்பும் வழியில், அவரது இருச்சக்கர வாகனம் பழுதானதாகவும், உதவுவதாக கூறி அருகே சென்ற கும்பல் ஒன்று திட்டமிட்டு கடத்திச் சென்று வன்புணர்வுக்கு இரையாக்கி, கொன்று பின்னர் சடலத்தை நெருப்பு வைத்து கொளுத்தியுள்ளது.

தற்போது, இந்த இரு கொலையிலும் ஈடுபட்டது ஒரே கும்பலா, பிரியங்கா வழக்கில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்