காதல் கடிதம் எழுதிய மாணவன்: கடும் தண்டனை கொடுத்து சர்ச்சையில் சிக்கிய ஆசிரியை

Report Print Vijay Amburore in இந்தியா

காதல் கடிதம் எழுதியதற்காக கைகால்களை ஒரே கயிற்றில் கட்டி வைத்து மாணவர்களுக்கு தண்டனை கொடுத்த ஆசிரியை பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஆந்திரா மாநிலத்தன் அனந்த்பூர் மாவட்ட அரசு பள்ளியில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள் நேற்று இணையத்தில் வைரலாக பரவின.

இரண்டு மாணவர்களின் கைகால்களை இருக்கையுடன் சேர்த்து கயிற்றால் கட்டி மிருகத்தனமாக பள்ளி ஆசிரியை தண்டனை கொடுத்துள்ளார்.

அதில், மூன்றாம் வகுப்பு மாணவன் காதல் கடிதம் எழுதியதற்காகவும், ஐந்தாம் வகுப்பு வகுப்பு மாணவன் தோழனின் பொருளை திருடியதற்காகவும் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவமானது இணையத்தில் வைரலானதை அடுத்து, சமூக ஆர்வலர்கள் சிலர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தலைமை ஆசிரியர், "சிறார்களை நான் தண்டிக்கவில்லை, அவர்களுடைய பெற்றோர்கள்தான் தண்டித்தனர்" என கூறியுள்ளார்.

இருப்பினும், பள்ளி வளாகத்திற்குள் இந்த சம்பவம் ஏன் நடந்தது என்பதை அவர் விளக்கவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்