இந்தியாவை உலுக்கிய பிரியங்காவின் மரணம்: கடைசி நேர சிசிடிவி காட்சி-குற்றவாளியின் புகைப்படம் வெளியானது

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் இரவு நேரத்தில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணுக்கு உதவுவதாக கூறி, அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

தெலங்கானாவின் Shamshabad-ஐ சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்ற பெண் மிகவும் கொடூரமாக உடல் கருகி நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இரவு நேரத்தில் தனியாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இவர், தன்னுடைய வண்டியின் டயர் பஞ்சர் ஆகிவிட்டதால், அதற்காக நின்று கொண்டிருந்த போது ஒரு சிலர் உதவ முன் வந்ததாக கூறி, தன் சகோதரிக்கு பயந்த நிலையில் போன் பேசியிந்தார்.

போன் பேசிய அடுத்த சில மணி நேரங்களிலே கொடூரமாக இறந்து கிடந்தார். அவர் பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி மொகமத் பாஷா என்ற நபர்தான் என்று அங்கிருக்கும் உள்ளூர் உடகங்கள் அவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதோடு பிரியங்காவின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.

மேலும் சமூகவலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் #RIPPriyankaReddy #JusticeForPriyankaReddy என்ற இரண்டு ஹேஷ் டேக்குகளும் டிரண்டாகி, இந்திய அளவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்