இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்று முதன் முறை... நரேந்திர மோடிக்கு நன்றி! கோட்டாபய உறுதி

Report Print Santhan in இந்தியா

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற சில நாட்களில் கோட்டாபய ராஜபக்‌ஷ இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நிலையில், அவருக்கு சிவப்பு கம்பள மற்றும் முப்படைகளின் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கையில் 7-வது ஜனாதிபதியாக பொது ஜன முன்னணி கட்சியை சேர்ந்த கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியேற்றார். இதையடுத்து அவர் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு நேற்று வருகை தந்தார்.

இந்தியா வந்த அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர். அதன் பின் இந்திய இராணுவ வீரர்களின் அணிவகுப்பு, மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

இவரின் வருகை இருநாட்டிற்கும் இடையே முக்கியமானது. கடந்த காலங்களில் ராஜபக்சே பதவி விலகிய போதும் சரி, இந்தியாவிற்கும், இலங்கைக்குமான உறவு என்பது சற்று சுமூகமாக இல்லை. அதன் பின் வந்த மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான அரசு இரு நாட்டு உறவுகளை ஸ்திரத்தன்மையுடன் கொண்டு செல்ல தீவிரம் காட்டியது.

ஏனெனில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முதலீடுகளும் ஒரு தேக்க நிலையில் இருந்தது. ராஜபக்சே அதிகளவு சீனாவிற்கான முதலீடுகளை ஊக்கப்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது.

இந்நிலையில் தான் அவரின் சகோதரர் கோட்டபய ராஜபக்‌ஷ நடந்த முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது இந்தியாவிற்கு பின்னடைவாக கருதப்பட்டது.

ஆனால் அதை சீர்செய்யும் நடவடிக்கையில் இந்திய அரசு இறங்கியது. குறிப்பாக அவர் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று மாலையே இந்தியா வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு சென்று, கோட்டபய ராஜபக்‌ஷவை வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு வருகை தரும் படி கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் வரவேற்பை ஏற்றுக் கொண்டு, முதல் வெளிநாட்டு பயணமாக கோட்டபய வந்திருப்பது, மிகவும் முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இலங்கை என்பது இந்தியாவிற்கு மிகவும் முக்கிய புவியியல் ரீதியாக கொண்ட நாடு ஆகும், ஏனெனில் இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் சரி மற்றும் அச்சுறுத்தல் உண்டாக்குவதற்கான எந்த காரணிகளையும் அனுமதிக்க முடியாது.

எனவே அதன் அடிப்படையில் இலங்கையுடனான உறவை பேனிகாப்பது, இந்தியாவிற்கு மிகவும் அவசியமாக பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கோட்டாபய , இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதன்முறையாக இந்தியா வந்துள்ளேன்.

சிறப்பான வரவேற்பு அளித்த இந்திய அரசு, ஜனாதிபதிக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

எனது பதவிக்காலத்தில், இந்தியா இலங்கை உறவுகளை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். இரு நாடுகளுக்கு இடையே நீணட கால உறவு உள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்புவிஷயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்