இருட்டுல தனியா இருக்கேன்.. பயமா இருக்கு என கூறிய இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்... கடைசியாக பேசிய ஓடியோ

Report Print Raju Raju in இந்தியா

ஹைதராபாத்தில் கருகிய நிலையில் பெண் மருத்துவர் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவர் கடைசியாக சகோதரியிடம் அழுது கொண்டே பேசிய ஓடியோ வெளியாகியுள்ளதோடு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தின் Shadnagar பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா ரெட்டி(மாதுரி). கால்நடை மருத்துவரான இவர் வியாழன் காலை கருகிய நிலையில் பாலத்தின் அடியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்த நிலையிலேயே பிரியங்கா Nawabpet- உள்ள கால்நடை மருத்துவமனையில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

பிரியங்கா கடந்த புதன்கிழமை மாலை 8.22 மணிக்கு தனது சகோதரி பவ்யாவுக்கு போன் செய்து பேசியுள்ளார். அந்த ஓடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அதில், தனது இருசக்கர வாகனம் பஞ்சராகிவிட்டதால், சாலையில் இருட்டில் தனியாக நிற்பதாகவும், இரண்டு பேர் உதவி செய்வதாக கூறி தனது வாகனத்தை வாங்கி சென்றதோடு இன்னும் திரும்பி வரவில்லை எனவும் அவர் கூறுகிறார், மேலும் அந்த இடத்தில் யாரும் இல்லாததால் தனக்கு பயமாக உள்ளது எனவும் கூறினார்

அதற்கு பவ்யா, வண்டியை பற்றி யோசிக்காமல் அருகில் இருக்கும் டோல் கேட்டுக்கு சென்று நில் என கூறினார்.

ஆனால் அதை கேட்காத பிரியங்கா, டோல் கேட்டில் நின்றால் சரியாக இருக்காது, கொஞ்ச நேரம் பார்க்கிறேன், வண்டி சரிசெய்யப்படாவிட்டால் நான் கிளம்பி வீட்டுக்கு வருகிறேன் என கூறினார்.

இதன்பின்னர் மீண்டும் குடும்பத்தார் பிரியங்காவை போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப்பில் இருந்தது.

இதையடுத்து அவர்கள் பொலிசில் புகார் கொடுத்த நிலையில் அடுத்த நாள் பிரியங்கா கருகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவரின் உடலுக்கு பிரேத பரிசோதனை முடிந்து குடும்பத்தாரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. ப்ரியங்காவின் உடலுக்கு இறுச்சடங்கும் நடந்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், ப்ரியங்கா கற்பழித்து கொலை செய்யப்பட்டு, உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த பகுதியில் அருகில் இருக்கும் சிசிடிவி கமெராக்களை ஆய்வு செய்து வருகிறோம்.

ப்ரியங்காவை கடத்துவதற்காக திட்டமிட்டு அவர் இருசக்கர வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

பின்னர் அவர் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறினர்.

இந்நிலையில் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையில் ப்ரியங்காவின் சகோதரி தன்னிடம் ப்ரியங்கா பயத்துடன் பேசியது குறித்து அழுது கொண்டே பேட்டியளித்தார்.

அப்போது கொலையாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என அவரும், குடும்பத்தாரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்