இலங்கையிலிருந்து தங்கத்தை நம்பி கடத்த சொன்ன நபர்..... திருடனிடம் திருடி மாட்டி கொண்டது போன்ற சம்பவம்!

Report Print Abisha in இந்தியா

இலங்கையிலிருந்து தங்கத்தை நம்பிக்கை வைத்து கடத்த சொன்ன நபர், அதை தற்போது இழந்து நிற்கு சம்பம் குறித்து பொலிசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் தலைமன்னார் கடற்பகுதியில் சுமார் 6.5கிலோ தங்கம் வைத்திருப்பதாகவும், அதை வாங்கி வந்து தந்தால் குறிப்பிட்ட தொகை தருவதாகவும் வேலுசாமி, புலிப்படை கணேசன் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து 11ஆம் திகதி தலைமன்னார் பகுதியில் இருந்து 2கோடி மதிப்புள்ள 6.5கிலோ தங்கத்தை வாங்கி கொண்டு அவர்கள் இருவரும் திரும்பியுள்ளனர்.

ஆனால், கரைக்கு திரும்பிய இருவரும், தங்கத்தை வாங்கி வர சொன்ன நபரிடம் கொடுக்காமல், முனியய்யா என்ற நபரிடம் கொடுத்து அதை விற்க கூறிவிட்டு, கடத்தி வர சொன்னவரிடம் அது சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக நாடகமாடியுள்ளனர்.

இதனால், சந்தேகம் அடைந்த அந்த நபர், தங்கத்தை கடத்தி வந்த இருவரிடமும் பல கோணங்களில் விசாரித்ததில், அவர்கள் போலி நாடகம் ஆடியதை கண்டறிந்துள்ளார்.

இதனையடுத்து தங்கத்தை விற்பதற்கு கொடுத்திருந்த முனியய்யாவை தேடிய போது அவர் தலைமறைவானது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தன் கணவரை காணவில்லை என்று முனியய்யாவின் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மேலும், கடத்தல் தங்கத்தை கேட்டு கொலை மிரட்டல் விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு உச்சிப்புளி காவல்துறையினர் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து ராமேஸ்வரம் சுங்கத்துறையினர் தங்கத்தை கடத்தி வந்தவர்களையும் கடத்தி வரப்பட்ட தங்கத்துடன் தலைமறைவான முனியய்யாவைவும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடத்தல் தொழிலில் நம்பிக்கை அடிப்படையில்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், இச்சம்பவம் திருடனிடம் திருட நினைத்து கும்பலாக சிக்கி கொண்டது, கடத்தல் காரர்களிடையே பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்